• Oct 02 2024

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்கள் பறிமுதல் - பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு!

Chithra / Oct 2nd 2024, 11:28 am
image

Advertisement

 

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்கள் பறிமுதல் - பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு  கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement