• May 17 2024

பத்து கோடிக்கும் அதிகமான பணம் மோசடி - ஏமாந்த 50 பேர்! - அதிரடியாக ஒருவர் கைது! samugammedia

Chithra / Jun 20th 2023, 1:36 pm
image

Advertisement

 ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி பலரிடம் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரின் மோசடியில் கிட்டத்தட்ட 50 பேர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிரிஹான தலைமையகத்தின் தலைமைப் பொலிஸ் பரிசோதகரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக மிரிஹான தலைமையக பொலிஸாருக்கு மாத்திரம் பதினைந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர் பலரை ஏமாற்றிய பண மோசடிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல பொலிஸாருக்கு முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பத்து கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ள நிலையில், சந்தேக நபர் கோட்டே மடிவெல வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயல்பட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் குழுவுடன் சென்று சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்து கோடிக்கும் அதிகமான பணம் மோசடி - ஏமாந்த 50 பேர் - அதிரடியாக ஒருவர் கைது samugammedia  ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி பலரிடம் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபரின் மோசடியில் கிட்டத்தட்ட 50 பேர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மிரிஹான தலைமையகத்தின் தலைமைப் பொலிஸ் பரிசோதகரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபருக்கு எதிராக மிரிஹான தலைமையக பொலிஸாருக்கு மாத்திரம் பதினைந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கு மேலதிகமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர் பலரை ஏமாற்றிய பண மோசடிகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் பல பொலிஸாருக்கு முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பத்து கோடிக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ள நிலையில், சந்தேக நபர் கோட்டே மடிவெல வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயல்பட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் குழுவுடன் சென்று சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement