• Jul 31 2025

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைப் பொதிகள் பறிமுதல்!

shanuja / Jul 30th 2025, 9:26 am
image

இலங்கைக்குக் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 2250 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கன்டெய்னர் லொறியில் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளை கியூ பிரிவு பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். 


ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கொண்ட பொதிகள்  கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்   கியூ பிரிவு பொலிஸார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அதன்போதே கன்டெய்னர் லொறி ஒன்றிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பொதிகளை  படகில் ஏற்றி கொண்டிருந்தபோது, கியூ பிரிவு பொலிஸார்  அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது  படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பொதிகளுடன் கடல் வழியாக தப்பித்துச் சென்றனர். 


மேலும் பீடி இலை ஏற்றி வந்த கன்டெய்னர் லொறியை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரிஓடைப் பகுதியைச் சேர்ந்த  ஒருவரைக் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில்  ஒப்படைத்தனர். 


இது  தொடர்பாக சந்தேகத்தின்  அடிப்படையில் வெள்ளரிஓடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை  உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைப் பொதிகள் பறிமுதல் இலங்கைக்குக் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 2250 கிலோ பீடி இலைகள் கொண்ட பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கன்டெய்னர் லொறியில் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகளை கியூ பிரிவு பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கொண்ட பொதிகள்  கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்   கியூ பிரிவு பொலிஸார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அதன்போதே கன்டெய்னர் லொறி ஒன்றிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பொதிகளை  படகில் ஏற்றி கொண்டிருந்தபோது, கியூ பிரிவு பொலிஸார்  அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது  படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பொதிகளுடன் கடல் வழியாக தப்பித்துச் சென்றனர். மேலும் பீடி இலை ஏற்றி வந்த கன்டெய்னர் லொறியை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரிஓடைப் பகுதியைச் சேர்ந்த  ஒருவரைக் கைது செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில்  ஒப்படைத்தனர். இது  தொடர்பாக சந்தேகத்தின்  அடிப்படையில் வெள்ளரிஓடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை  உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement