• Jul 16 2025

புதுக்குடியிருப்பு களஞ்சிய சாலையில் நெற்கொள்வனவு ஆரம்பம்!

shanuja / Jul 16th 2025, 4:56 pm
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பாவில் நெல் களஞ்சிய சாலையில் நெற் கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


கோம்பாவில் நெல் களஞ்சிய சாலையில் நெற்கொள்வனவு, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .கோகிலாதரன் தலைமையில் இன்றையதினம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


குறித்த நெல் கொள்வனவின் போது வெள்ளை, சிவப்பு சம்பா அரிசி கிலோ 125 ரூபாவிற்கும், வெள்ளை, சிவப்பு நாடு அரிசி - 120 ரூபாவிற்கும் நெல்லின் தரத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொள்வனவு செய்யப்படுகின்றது.  


குறித்த கொள்வனவானது புதன் , வியாழன் ஆகிய தினங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு களஞ்சிய சாலையில் நெற்கொள்வனவு ஆரம்பம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பாவில் நெல் களஞ்சிய சாலையில் நெற் கொள்வனவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோம்பாவில் நெல் களஞ்சிய சாலையில் நெற்கொள்வனவு, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .கோகிலாதரன் தலைமையில் இன்றையதினம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த நெல் கொள்வனவின் போது வெள்ளை, சிவப்பு சம்பா அரிசி கிலோ 125 ரூபாவிற்கும், வெள்ளை, சிவப்பு நாடு அரிசி - 120 ரூபாவிற்கும் நெல்லின் தரத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொள்வனவு செய்யப்படுகின்றது.  குறித்த கொள்வனவானது புதன் , வியாழன் ஆகிய தினங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement