• May 20 2024

வலி. வடக்கில் 540 வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை..! யாழ். அரச அதிபர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 31st 2023, 1:59 pm
image

Advertisement

வலி வடக்கில் 540 வீடுகள் பயன்படுத்தப்படாத நிலை உள்ளது. இவ் வீடுகளில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறும் நிலையில் அவற்றைத் தடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் வீட்டுத் திட்டங்களைப் பெற முயற்சிக்கும் பயனாளிகளின் பட்டியல் அதிகரித்துவரும் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இளந்தொழில் முயற்சியார்களுக்காக காணி வழங்கப்படும் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலுள்ளமை தொடர்பில்  மேற்கொண்ட ஆய்வில், 

அனைத்து நேர்முகத் தேர்வுகளும் நிறைவடைந்து பயனாளர்கள் தெரிவு  செய்யப்பட்டு விண்ணப்பதாரிகள் சாவகச்சேரி, மருதங்கேணி, நெடுந்தீவு மற்றும்  கரவெட்டி பிரதேசங்களில் காணியை கோரியிருந்த நிலையில், சாவகச்சேரி பகுதியில் மட்டுவில் வடக்கு, சந்திரபுரம் பகுதிகள் வனவளத்துறையிடம் காணப்படும் நிலையில் நேற்றைய தினமும் அளவை செய்துள்ளதாக சாவகச்சேரி பிரதேச செயளாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை மருதங்கேணி பிரதேச செயல தெரிவு செய்யப்பட்டோருக்கான காணிகள் அடையாளப்படுத்தியுள்ளதாகவும் மருதங்கேனி பிரதேச செயளாளர் தெரிவித்தார்.

இயன்றவரை காணிகளை அந்தந்த பிரதேசத்திலுள்ள முயற்சியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இந்த மாத இறுதியில் அடுத்த ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் சாதகமான  நடவடிக்கைகளை மேற்காள்ளுமாறும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வலி. வடக்கில் 540 வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை. யாழ். அரச அதிபர் வெளியிட்ட தகவல் samugammedia வலி வடக்கில் 540 வீடுகள் பயன்படுத்தப்படாத நிலை உள்ளது. இவ் வீடுகளில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறும் நிலையில் அவற்றைத் தடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ். மாவட்ட அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் வீட்டுத் திட்டங்களைப் பெற முயற்சிக்கும் பயனாளிகளின் பட்டியல் அதிகரித்துவரும் நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.மேலும், இளந்தொழில் முயற்சியார்களுக்காக காணி வழங்கப்படும் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலுள்ளமை தொடர்பில்  மேற்கொண்ட ஆய்வில், அனைத்து நேர்முகத் தேர்வுகளும் நிறைவடைந்து பயனாளர்கள் தெரிவு  செய்யப்பட்டு விண்ணப்பதாரிகள் சாவகச்சேரி, மருதங்கேணி, நெடுந்தீவு மற்றும்  கரவெட்டி பிரதேசங்களில் காணியை கோரியிருந்த நிலையில், சாவகச்சேரி பகுதியில் மட்டுவில் வடக்கு, சந்திரபுரம் பகுதிகள் வனவளத்துறையிடம் காணப்படும் நிலையில் நேற்றைய தினமும் அளவை செய்துள்ளதாக சாவகச்சேரி பிரதேச செயளாளர் குறிப்பிட்டார்.இதேவேளை மருதங்கேணி பிரதேச செயல தெரிவு செய்யப்பட்டோருக்கான காணிகள் அடையாளப்படுத்தியுள்ளதாகவும் மருதங்கேனி பிரதேச செயளாளர் தெரிவித்தார்.இயன்றவரை காணிகளை அந்தந்த பிரதேசத்திலுள்ள முயற்சியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், இந்த மாத இறுதியில் அடுத்த ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில் சாதகமான  நடவடிக்கைகளை மேற்காள்ளுமாறும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement