• Sep 19 2024

மதத்திற்கு எதிரான கருத்துக்களை நீக்காததால் விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

Tamil nila / Feb 4th 2023, 8:47 pm
image

Advertisement

இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். அந்நாட்டில் மதம், கடவுளை விமர்சனம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. மதநிந்தனையில் ஈடுபட்டதாக பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 


இதனிடையே, இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மதநிந்தனை தொடர்பான அந்த கருத்துக்களை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால், விக்கிப்பீடியா எந்த கருத்துக்களையும் நீக்கவில்லை. 


இந்நிலையில், மதம், கடவுளை அவமதிக்கும் வகையிலான மத நிந்தனை கருத்துக்களை அவதூறு கருத்துக்கள் நீக்கப்படாததையடுத்து விக்கிப்பீடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. 


மதநிந்தனை கருத்துக்கள், கடவுள், மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


மதத்திற்கு எதிரான கருத்துக்களை நீக்காததால் விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான் இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். அந்நாட்டில் மதம், கடவுளை விமர்சனம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. மதநிந்தனையில் ஈடுபட்டதாக பலர் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, இணையதள தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மதநிந்தனை தொடர்பான அந்த கருத்துக்களை விக்கிப்பீடியா 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டது. ஆனால், விக்கிப்பீடியா எந்த கருத்துக்களையும் நீக்கவில்லை. இந்நிலையில், மதம், கடவுளை அவமதிக்கும் வகையிலான மத நிந்தனை கருத்துக்களை அவதூறு கருத்துக்கள் நீக்கப்படாததையடுத்து விக்கிப்பீடியா இணையதளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. மதநிந்தனை கருத்துக்கள், கடவுள், மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement