• Apr 19 2024

ஸ்காட்லாந்தின் புதிய பிரதமராகும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப்! samugammedia

Chithra / Mar 28th 2023, 6:05 pm
image

Advertisement

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப்என்பவர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த நிக்கோலா ஸ்டார்ஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து பிரதமராக இருந்து வந்த நிலையில், சென்ற  பிப்ரவரி மாதம் தனது பிரதமர் மற்றும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவி போன்றவற்றை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான 37 வயதான சுகாதாரத்துறை அமைச்சர் ஹம்சா யூசுப் தேசிய கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஹம்சா யூசுப் குடும்பம் 1960 காலகட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து ஸ்காட்லாந்தில் குடியேறியதுடன்,  கிளாஸ்கோ பகுதியில் உள்ள ஹட்சசன்ஸ் தனியார் பள்ளியில் பள்ளிப் படிப்பையும்  கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

கால் செண்டரில் வேலை பார்த்து வந்த ஹம்சா யூசுப், ஸ்காட்லாந்து தேசிய கட்சியில் இணைந்து 

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிளாஸ்கோ தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்காட்லாந்து அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளதுடன்,

சுகாதாரத்துறை அமைச்சராகவும்  இருந்து வருகின்றார்.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவில் வெற்றி பெற்றது குறித்து அவர்,ஸ்காட்லாந்தில் உள்ள மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரம் தேவைப்படுவதகவும், தாம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு நாட்டின் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு ஒருவரது நிறமோ, மதமோ தடையாக அமையாது என்பதில் நம்பிக்கையாக இருப்பதாகவும்,மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை தீர்ப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை  உலக அளவில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

ஸ்காட்லாந்தின் புதிய பிரதமராகும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் samugammedia ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப்என்பவர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த நிக்கோலா ஸ்டார்ஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்து பிரதமராக இருந்து வந்த நிலையில், சென்ற  பிப்ரவரி மாதம் தனது பிரதமர் மற்றும் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவி போன்றவற்றை ராஜினாமா செய்துள்ளார்.ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான 37 வயதான சுகாதாரத்துறை அமைச்சர் ஹம்சா யூசுப் தேசிய கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஹம்சா யூசுப் குடும்பம் 1960 காலகட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து ஸ்காட்லாந்தில் குடியேறியதுடன்,  கிளாஸ்கோ பகுதியில் உள்ள ஹட்சசன்ஸ் தனியார் பள்ளியில் பள்ளிப் படிப்பையும்  கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.கால் செண்டரில் வேலை பார்த்து வந்த ஹம்சா யூசுப், ஸ்காட்லாந்து தேசிய கட்சியில் இணைந்து 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிளாஸ்கோ தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.ஸ்காட்லாந்து அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளதுடன்,சுகாதாரத்துறை அமைச்சராகவும்  இருந்து வருகின்றார்.ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவர் பதவில் வெற்றி பெற்றது குறித்து அவர்,ஸ்காட்லாந்தில் உள்ள மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரம் தேவைப்படுவதகவும், தாம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஒரு நாட்டின் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கு ஒருவரது நிறமோ, மதமோ தடையாக அமையாது என்பதில் நம்பிக்கையாக இருப்பதாகவும்,மக்களுடைய வாழ்வாதார பிரச்சனை தீர்ப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவேன் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை  உலக அளவில் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement