• Apr 26 2024

பேஸ்புக் நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

Tamil nila / Jan 29th 2023, 5:23 pm
image

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார்.


இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.


இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர், இதற்காக ஸ்வீடன் நாட்டு பெண்ணான கிறிஸ்டன் லிபர்ட் இந்தியாவுக்கு பறந்து வந்துள்ளார்.


இந்நிலையில், வெள்ளிக்கிழமை உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்து முறைப்படி இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.


இது தொடர்பாக ANI பகிர்ந்துள்ள வீடியோவில், வர்மலா விழாவில் ஸ்வீடன் நாட்டு பெண் கிறிஸ்டன் லிபர்ட் இந்திய கலாச்சார திருமண உடையை அணிந்து மணமகனின் கழுத்தில் மாலை அணிவதை பார்க்க முடிகிறது.


திருமணத்திற்கு பவன் குமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மணமகனின் தந்தை கீதம் சிங் தெரிவித்த கருத்தில், குழந்தைகளின் மகிழ்ச்சியில் தான் தங்களின் மகிழ்ச்சி உள்ளது. 


இந்த திருமணத்திற்கு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார். பவன் குமார் டெஹ்ராடூனில் பி.டெக் படிப்பை முடித்து, நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பேஸ்புக் நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார்.இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர், இதற்காக ஸ்வீடன் நாட்டு பெண்ணான கிறிஸ்டன் லிபர்ட் இந்தியாவுக்கு பறந்து வந்துள்ளார்.இந்நிலையில், வெள்ளிக்கிழமை உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்து முறைப்படி இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.இது தொடர்பாக ANI பகிர்ந்துள்ள வீடியோவில், வர்மலா விழாவில் ஸ்வீடன் நாட்டு பெண் கிறிஸ்டன் லிபர்ட் இந்திய கலாச்சார திருமண உடையை அணிந்து மணமகனின் கழுத்தில் மாலை அணிவதை பார்க்க முடிகிறது.திருமணத்திற்கு பவன் குமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மணமகனின் தந்தை கீதம் சிங் தெரிவித்த கருத்தில், குழந்தைகளின் மகிழ்ச்சியில் தான் தங்களின் மகிழ்ச்சி உள்ளது. இந்த திருமணத்திற்கு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார். பவன் குமார் டெஹ்ராடூனில் பி.டெக் படிப்பை முடித்து, நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement