• Nov 17 2024

பல புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - படுதோல்வியடைந்த முன்னாள் உறுப்பினர்கள்

Chithra / Nov 15th 2024, 12:09 pm
image

 

2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில் வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, சன்ன ஜயசுமன, பவித்திரா வன்னிஆராச்சி, சாகல ரட்நாயக்க, தோல்வி அடைந்துள்ளனர். 

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் லன்சா, பிரசன்ன ரணவீர, அஜித் ராஜபக்ச, அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜயசேகர ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.

இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன்  செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர்

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பல  புதிய முகங்களுடன் நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல புதிய முகங்களுடன் கூடவுள்ள நாடாளுமன்றம் - படுதோல்வியடைந்த முன்னாள் உறுப்பினர்கள்  2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில் வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பான்மையான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, சன்ன ஜயசுமன, பவித்திரா வன்னிஆராச்சி, சாகல ரட்நாயக்க, தோல்வி அடைந்துள்ளனர். ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தோல்வி அடைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிமல் லன்சா, பிரசன்ன ரணவீர, அஜித் ராஜபக்ச, அருந்திக்க பெர்னாண்டோ, ஜானக்க வக்கும்புர, பிரேமலால் ஜயசேகர ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன்  செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர்இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.எதிர்வரும் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.இந்நிலையில் பல  புதிய முகங்களுடன் நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement