• May 04 2024

ரஷ்யாக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்!SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 11:25 am
image

Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கை நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.

இந்நிலையில் குறித்த போர் நடவடிக்கை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன.

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.

இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறியுள்ளன.

141 நாடுகள் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்SamugamMedia உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கை நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.இந்நிலையில் குறித்த போர் நடவடிக்கை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறியுள்ளன.141 நாடுகள் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement