• May 17 2024

வங்குரோத்து நாடு; சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 11:28 am
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று(24) உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியை வற்புறுத்துவதில் தலையிடுமாறு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


வங்குரோத்து நாடு; சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ள இலங்கை SamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை சர்வதேச செய்திகளில் இடம்பிடித்துள்ளது.பல சர்வதேச ஊடகங்கள் இலங்கையை வங்குரோத்து நாடாக அடையாளப்படுத்தி, நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மார்ச் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று(24) உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியை வற்புறுத்துவதில் தலையிடுமாறு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement