• Feb 02 2025

கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை! ஜனாதிபதி உறுதி

Chithra / Feb 2nd 2025, 1:20 pm
image

 

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இன்று ஊழல், மோசடியற்ற ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நாட்டுக்கு வரும் நிலையேற்பட்டுள்ளது.

நம் நாட்டின் வரலாற்றில் உலக வங்கி வழங்கிய அதிகூடிய தொகையொன்றை அடுத்த வருடமளவில் இந்நாட்டு விவசாயத்துறை அபிவிருத்திக்காக வழங்க உள்ளது.

அதேபோன்று கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்ப்பதற்கும் நாங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம். 

விரைவில் 24 மணிநேரமும் கடவுச்சீட்டு அலுவலகத்தை செயற்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

அதற்காக ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களை மீண்டும் தற்காலிக அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். 

அதன் ஊடாக விரைவில் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்த்து வைப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை ஜனாதிபதி உறுதி  தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதும் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நாட்டில் இன்று ஊழல், மோசடியற்ற ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நாட்டுக்கு வரும் நிலையேற்பட்டுள்ளது.நம் நாட்டின் வரலாற்றில் உலக வங்கி வழங்கிய அதிகூடிய தொகையொன்றை அடுத்த வருடமளவில் இந்நாட்டு விவசாயத்துறை அபிவிருத்திக்காக வழங்க உள்ளது.அதேபோன்று கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்ப்பதற்கும் நாங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம். விரைவில் 24 மணிநேரமும் கடவுச்சீட்டு அலுவலகத்தை செயற்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.அதற்காக ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களை மீண்டும் தற்காலிக அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதன் ஊடாக விரைவில் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நெருக்கடிகளை தீர்த்து வைப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement