• Nov 26 2024

ரோபோ செய்த அறுவை சிகிச்சை- பரிதாபமாக உயிரிழந்த நோயாளி..!!*

Tamil nila / Feb 15th 2024, 10:12 pm
image

ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக  நோயாளி ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

  அதாவது  அமெரிக்காவில் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையிலே பாதிக்கப்பட்ட நோயாளி பரிதாபமாக இறந்திருக்கிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது.

பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது.

இருப்பினும்  அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ரா ,  ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ள்து.

ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார்.

அத்துடன்  டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார். ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரோபோ செய்த அறுவை சிகிச்சை- பரிதாபமாக உயிரிழந்த நோயாளி.* ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக  நோயாளி ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.  அதாவது  அமெரிக்காவில் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையிலே பாதிக்கப்பட்ட நோயாளி பரிதாபமாக இறந்திருக்கிறார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது.பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது.இருப்பினும்  அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ரா ,  ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ள்து.ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார்.அத்துடன்  டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார். ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement