• Nov 28 2024

மின்சார சபையின் அசமந்தப் போக்கால் பாதிப்படையும் மக்கள்; வாகரை பிரதேச செயலகத்திற்கு முன் போராட்டம்

Chithra / Nov 22nd 2024, 2:31 pm
image


வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி, கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டினை மேற்கொள்வதால், 

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை  முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

"துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே", "மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே" போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், 

தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மகஜரினை  கையளித்ததனைத் தொடர்ந்து பிரதே செயலாளரின் வாக்குறியினை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மின்சார சபையின் அசமந்தப் போக்கால் பாதிப்படையும் மக்கள்; வாகரை பிரதேச செயலகத்திற்கு முன் போராட்டம் வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி, கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டினை மேற்கொள்வதால், இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள  பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை  முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்."துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே", "மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே" போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மகஜரினை  கையளித்ததனைத் தொடர்ந்து பிரதே செயலாளரின் வாக்குறியினை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement