• Apr 26 2024

மக்களே அவதானம்! வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும்!! வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Apr 17th 2023, 6:49 am
image

Advertisement


நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

இந்நிலையில், இன்று வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அடிக்கடி நீர் அருந்தவும் , முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும்,இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

மக்களே அவதானம் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் வெளியான விசேட அறிவிப்பு samugammedia நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது.இந்நிலையில், இன்று வெப்ப சுட்டெண் ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.அடிக்கடி நீர் அருந்தவும் , முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும்,இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement