• Sep 20 2024

காலி முகத்திடலில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு பெரும் தொல்லை! எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia

Chithra / Jun 26th 2023, 8:52 pm
image

Advertisement

காலி முகத்திடல் பகுதியில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது காலி முகத்திடல் பகுதியில் சுமார் 150 பேர் கொண்ட யாசகம்கேட்பவர்கள் குழுவொன்று அங்கு இருப்பதாகவும் அதனால் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக, அவர்களை ஹம்பாந்தோட்டை, ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை அவர்களின் பணியிடத்தின் போது தேவையான தங்குமிடங்களையும் உணவையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

காலி முகத்திடலில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு பெரும் தொல்லை எடுக்கப்பட்ட நடவடிக்கை samugammedia காலி முகத்திடல் பகுதியில் யாசகம் கேட்பவர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.தற்போது காலி முகத்திடல் பகுதியில் சுமார் 150 பேர் கொண்ட யாசகம்கேட்பவர்கள் குழுவொன்று அங்கு இருப்பதாகவும் அதனால் மக்களுக்கு பெரும் தொல்லைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தீர்வாக, அவர்களை ஹம்பாந்தோட்டை, ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை துறைமுக அதிகாரசபை அவர்களின் பணியிடத்தின் போது தேவையான தங்குமிடங்களையும் உணவையும் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement