• May 19 2024

கொழும்பில் குட்டி யானையுடன் போராட்டத்தில் குதித்த மக்கள்..! samugammedia

Chithra / Oct 18th 2023, 4:15 pm
image

Advertisement

 

இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கடந்த நாட்களாக உயிரிழந்த யானைகளின் படங்களை ஏந்தியவாறும் சுலோகங்களை பிடித்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் சுற்றாடல் அமைப்பினர் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யானைகள் - மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.

மேலும், யானைக் காணிகளை பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.


கொழும்பில் குட்டி யானையுடன் போராட்டத்தில் குதித்த மக்கள். samugammedia  இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாட்டில் கடந்த நாட்களாக உயிரிழந்த யானைகளின் படங்களை ஏந்தியவாறும் சுலோகங்களை பிடித்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் சுற்றாடல் அமைப்பினர் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.யானைகள் - மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement