• Sep 19 2024

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்! samugammedia

Tamil nila / Aug 3rd 2023, 4:27 pm
image

Advertisement

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


இந்த நிலையில் குறித்த தொழிற்சாலையால் தமது வளம் சுரண்டப்படுவதாகவும், எதிர்காலத்தில் நிலங்கள் உவராக மாறும் நிலையுள்ளதாகவும், சுவாசம் சார்ந்த பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்து கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராமங்களைச் சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பொன்னாவெளி பொதுநோக்கு மண்டபத்திலிருந்து ஆரம்பித்து குறித்த நிறுவனம் ஆய்வுப்பணியை முன்னெடுத்து வரும் இடம் வரை பேரணியாக சென்றது.

ஆய்வு பணிகள் மேற்கொள்ளுகின்ற இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.


குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம் samugammedia சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் டோக்கியோ நிறுவனத்தினால் சீமெந்து தொழிற்சாலை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலையால் தமது வளம் சுரண்டப்படுவதாகவும், எதிர்காலத்தில் நிலங்கள் உவராக மாறும் நிலையுள்ளதாகவும், சுவாசம் சார்ந்த பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்து கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராமங்களைச் சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.குறித்த போராட்டம் பொன்னாவெளி பொதுநோக்கு மண்டபத்திலிருந்து ஆரம்பித்து குறித்த நிறுவனம் ஆய்வுப்பணியை முன்னெடுத்து வரும் இடம் வரை பேரணியாக சென்றது.ஆய்வு பணிகள் மேற்கொள்ளுகின்ற இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement