• Oct 27 2024

நுகர்வோர் உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும், அதற்கு சிவில் அமைப்புக்களும் தலையிடவேண்டும் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Tharun / Apr 9th 2024, 6:27 pm
image

Advertisement

நுகர்வோர் உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். எண்ணெய், எரிவாயு, மின்சாரம் இல்லாத போது மக்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றார்கள். ஆனால் சந்தை அநீதிக்கு எதிராக இதுவரை அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் 

இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ள  ஊடகவியலாளர்  சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை  சுட்டிக்காட்டினார்.

குறித்த இதேவேளை, தனது முகநூல் கணக்கின் ஊடாக திங்கட்கிழமைதோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மக்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதி  விலை, மொத்த விலை மற்றும் சில்லறை விலையை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொருட்களின் விலையை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக்கொள்கிறார். பல்வேறு அமைப்புகளும் தலையிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முகப்புத்தகத்தில்  காட்சிப்படுதலுடன், நாட்டு மக்கள் அனைவரும் அறியும் வகையில் விலை அறிவிப்பு முறையும் தயாராகி வருகிறது.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கடந்த  2023ஆம் ஆண்டு வரை நாட்டுக்குள் வெண்டைக்காய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேவைப்படுபவர்களுக்கு தரவுகளை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். பல்பொருள் அங்காடிகள் அந்த இறக்குமதியை செய்துள்ளன. ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் அவர் வழங்கிய தகவல்கள் தரவுகளின் அடிப்படையிலானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகர்வோர் உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும், அதற்கு சிவில் அமைப்புக்களும் தலையிடவேண்டும் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நுகர்வோர் உரிமைகளுக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார். எண்ணெய், எரிவாயு, மின்சாரம் இல்லாத போது மக்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றார்கள். ஆனால் சந்தை அநீதிக்கு எதிராக இதுவரை அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ள  ஊடகவியலாளர்  சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை  சுட்டிக்காட்டினார்.குறித்த இதேவேளை, தனது முகநூல் கணக்கின் ஊடாக திங்கட்கிழமைதோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மக்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதி  விலை, மொத்த விலை மற்றும் சில்லறை விலையை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொருட்களின் விலையை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கேட்டுக்கொள்கிறார். பல்வேறு அமைப்புகளும் தலையிட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முகப்புத்தகத்தில்  காட்சிப்படுதலுடன், நாட்டு மக்கள் அனைவரும் அறியும் வகையில் விலை அறிவிப்பு முறையும் தயாராகி வருகிறது.மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கடந்த  2023ஆம் ஆண்டு வரை நாட்டுக்குள் வெண்டைக்காய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேவைப்படுபவர்களுக்கு தரவுகளை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். பல்பொருள் அங்காடிகள் அந்த இறக்குமதியை செய்துள்ளன. ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் அவர் வழங்கிய தகவல்கள் தரவுகளின் அடிப்படையிலானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement