• May 17 2024

மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய மக்கள்..! போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர்..! பொலிஸார் குவிப்பு samugammedia

Chithra / Oct 8th 2023, 11:03 am
image

Advertisement

 

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள்  உள்ளிட்ட பலர்  செங்கலடி பகுதியில்  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். 

செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு, மக்கள் குறித்த வீதியில் ஒன்று திரண்டு  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதுடன் பதற்றம் நிலவுகிறது. 

மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் போராட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம்இ நீதிமன்ற கட்டளை ஒன்றும் கிடைத்துள்ளதாகவும், அது வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. 



மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கிய மக்கள். போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர். பொலிஸார் குவிப்பு samugammedia  மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள்  உள்ளிட்ட பலர்  செங்கலடி பகுதியில்  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு, மக்கள் குறித்த வீதியில் ஒன்று திரண்டு  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், பண்ணையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதுடன் பதற்றம் நிலவுகிறது. மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் போராட்டக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம்இ நீதிமன்ற கட்டளை ஒன்றும் கிடைத்துள்ளதாகவும், அது வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement