பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலர் அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடவுச்சீட்டுக்கான மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலர் அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்ததுடன், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதன் மூலம் அந்த நெருக்கடி முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார். எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வை இதுவரை வழங்க முடியவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.