• May 17 2024

அமைச்சர் பிரசன்னவின் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு..! samugammedia

Chithra / Jun 26th 2023, 9:46 am
image

Advertisement

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமையில் களனி பிரதேசத்தில், இடம்பெறவிருந்த கூட்டம் ஒன்றிற்கு, செல்லவிருந்த மூன்று பேர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக களனி காவல்துறையின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

திப்பிட்டிகொட, கனுவ பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படும் மூவர் மீதே இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

தரங்க என்ற நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவருடன் தங்கியிருந்த இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில காலம் விளக்கமறியலில் 

வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் கூட்டத்திற்கு செல்வதற்காக அவரது நண்பர்கள் இருவர் மற்றும் சிலரும் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி56 ரக துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலால் உயிருக்கு பயந்து ஓடும்போது அவர்களை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த பகுதியல் இருந்து சுமார் பதினைந்து காலி தோட்டாக்கள் சிதறி கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

ஒருவர் திப்பிட்டிகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் திப்பிட்டிகொட பிரதேசத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன

அமைச்சர் பிரசன்னவின் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு. samugammedia இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தலைமையில் களனி பிரதேசத்தில், இடம்பெறவிருந்த கூட்டம் ஒன்றிற்கு, செல்லவிருந்த மூன்று பேர் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக களனி காவல்துறையின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.திப்பிட்டிகொட, கனுவ பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படும் மூவர் மீதே இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.தரங்க என்ற நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவருடன் தங்கியிருந்த இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தரங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் கூட்டத்திற்கு செல்வதற்காக அவரது நண்பர்கள் இருவர் மற்றும் சிலரும் காத்திருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி56 ரக துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலால் உயிருக்கு பயந்து ஓடும்போது அவர்களை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மீண்டும் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அந்த பகுதியல் இருந்து சுமார் பதினைந்து காலி தோட்டாக்கள் சிதறி கிடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.ஒருவர் திப்பிட்டிகொட பிரதேசத்தில் வசிப்பதாகவும், சில வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.இராஜாங்க அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் திப்பிட்டிகொட பிரதேசத்திற்கு வந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement