• Nov 25 2024

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்களும் வாக்களிக்க வாய்ப்பு

Chithra / Jul 19th 2024, 12:01 pm
image

 

இலங்கையின்   இந்த வருட ஜனாதிபதி தேர்தலில்  விசேட தேவையுடையவர்கள் முதன்முறையாக வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு  முடிவு செய்துள்ளது.

அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி (Braille) எழுத்து முறையில் அடையாளம் காணும் அமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்களும் வாக்களிக்க வாய்ப்பு  இலங்கையின்   இந்த வருட ஜனாதிபதி தேர்தலில்  விசேட தேவையுடையவர்கள் முதன்முறையாக வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த வசதியை ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு  முடிவு செய்துள்ளது.அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி (Braille) எழுத்து முறையில் அடையாளம் காணும் அமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியில் அடையாளம் காணும் வகையில் சிறப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement