• May 19 2024

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும்-ரோஹினா மஹ்ரூப் நம்பிக்கை!

Sharmi / Dec 17th 2022, 10:21 pm
image

Advertisement

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுக்கான பல திட்டங்களை கட்சியின் லக்வனிதா மூலம் செய்யவுள்ளோம் எனவும் திருகோணமலை மாவட்டத்திலும் மக்களுடைய அடிலாசைகள் நிறைவேறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா இடிமன் பகுதியில் இன்று (17)மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதாவது கடந்த 2020 இல் ஒரு சீப் கண்டினராக களம் இறங்கி இருந்தேன்.தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்றால், கட்சியின் மறுசீரமைப்பு பொதுவாக இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

அதாவது கட்சி மறுசீரமைப்பு என்று சொன்னால்,பொது செயலளாரால் தொடங்கி, ஒவ்வொரு வட்டராங்களுக்கு உரிய அமைப்பாளர்களும்,மற்றும் தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்களும்,இருந்த பழைய அமைப்பாளர்களை வைத்துக் கொண்டு கட்சி சம்பந்தமாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு நிலைப்பாட்டில் தான் ஜக்கிய தேசிய கட்சி தற்போது உள்ளது.

ஜக்கிய கட்சி ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் எனது எதிர்கால திட்டங்கள் என்னவென்றால், கட்சியின் மறுசீரமைப்பு நடைபெற்ற பின்னர்,அதாவது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், ஜ.எம்.எப் விடயங்கள் முடிந்த பிறகு, கட்சி ஊடாக புதிய பதவிகள் ஊடாக , மக்களுக்கு ஏதாவது ஒரு புதிய முயற்சி செய்வதற்கோ ,அல்லது பொருளாதாரத திட்டத்துக்கு கைகொடுக்கும் திட்டங்கள் எங்கள் ஜக்கிய தேசிய கட்சியின் லக்தெனியா அமைப்பின் மூலமாகவும், செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

கட்சியின்மறுசீரமைப்புக்கான ஒரு முன்னெடுப்பின் பின்னர்,மக்களுக்கு சில விடயங்களை அவருடைய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதி இணைப்பு செயற்பாட்டாளர்கள் சில பேர் நியமிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

ஆகவே திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஜனாதிபதி நியமிப்பாளராக நியமிக்கப்படும் ஆக இருந்தால்,அதன் மூலமாக மகக்ளுக்கு நிறைய சேவைகளை செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும்-ரோஹினா மஹ்ரூப் நம்பிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பின் பின் மக்களுக்கான பல திட்டங்களை கட்சியின் லக்வனிதா மூலம் செய்யவுள்ளோம் எனவும் திருகோணமலை மாவட்டத்திலும் மக்களுடைய அடிலாசைகள் நிறைவேறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார்.கிண்ணியா இடிமன் பகுதியில் இன்று (17)மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அதாவது கடந்த 2020 இல் ஒரு சீப் கண்டினராக களம் இறங்கி இருந்தேன்.தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்றால், கட்சியின் மறுசீரமைப்பு பொதுவாக இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.அதாவது கட்சி மறுசீரமைப்பு என்று சொன்னால்,பொது செயலளாரால் தொடங்கி, ஒவ்வொரு வட்டராங்களுக்கு உரிய அமைப்பாளர்களும்,மற்றும் தொகுதிகளுக்கான புதிய அமைப்பாளர்களும்,இருந்த பழைய அமைப்பாளர்களை வைத்துக் கொண்டு கட்சி சம்பந்தமாக சில நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு நிலைப்பாட்டில் தான் ஜக்கிய தேசிய கட்சி தற்போது உள்ளது.ஜக்கிய கட்சி ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் எனது எதிர்கால திட்டங்கள் என்னவென்றால், கட்சியின் மறுசீரமைப்பு நடைபெற்ற பின்னர்,அதாவது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், ஜ.எம்.எப் விடயங்கள் முடிந்த பிறகு, கட்சி ஊடாக புதிய பதவிகள் ஊடாக , மக்களுக்கு ஏதாவது ஒரு புதிய முயற்சி செய்வதற்கோ ,அல்லது பொருளாதாரத திட்டத்துக்கு கைகொடுக்கும் திட்டங்கள் எங்கள் ஜக்கிய தேசிய கட்சியின் லக்தெனியா அமைப்பின் மூலமாகவும், செய்ய எதிர்பார்த்துள்ளோம்.கட்சியின்மறுசீரமைப்புக்கான ஒரு முன்னெடுப்பின் பின்னர்,மக்களுக்கு சில விடயங்களை அவருடைய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதி இணைப்பு செயற்பாட்டாளர்கள் சில பேர் நியமிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.ஆகவே திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஜனாதிபதி நியமிப்பாளராக நியமிக்கப்படும் ஆக இருந்தால்,அதன் மூலமாக மகக்ளுக்கு நிறைய சேவைகளை செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement