• Nov 24 2024

கடன் தள்ளுபடி குறித்து மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Chithra / Aug 27th 2024, 3:57 pm
image

  

ரூபா 54 பில்லியன் தொகை அறவிட முடியாக் கடன்களை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டும் வகையில் சமீபத்தில் மீண்டும் ஒரு தடவை வதந்தி எழுந்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதுடன், இதனை நாம் திட்டவட்டமாக மறுக்கின்றோம். இந்த வதந்தியில் குறிப்பிடும் வகையில் எவ்விதமான கடன்களும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை மக்கள் வங்கியின் முகாமைத்துவம் உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்ற காலகட்டங்களில் இந்த ஆதாரமற்ற செய்திகள் மீண்டும் வெளிக்கிளம்புவது, மறைமுக நிகழ்ச்சிநிரலுடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வதந்திகள் திட்டமிட்ட பிரச்சாரம் என்பதைக் காண்பிக்கின்றது.

வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் செயல்படுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்ற ஒரு நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் இந்த குறுகிய நோக்குடனான முயற்சிகள் குறித்து அது வருந்துகின்றது.

நாட்டிலுள்ள, அனுமதி உரிமம் பெற்ற ஏனைய வர்த்தக வங்கிகளைப் போலவே, பலதரப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ் கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்க தான் செயற்படுவதை மக்கள் வங்கி மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.

இந்த ஆதாரமற்ற வதந்திகளைப் புறக்கணித்து, துல்லியமான மற்றும் உண்மையான தகவல் விபரங்களுக்கு மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் மார்க்கங்களினூடாக வெளியிடப்படுகின்ற விபரங்களை மாத்திரம் நம்புமாறு நாம் பொது மக்களை வலியுறுத்த விரும்புகின்றோம். என்றுள்ளது.

கடன் தள்ளுபடி குறித்து மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்   ரூபா 54 பில்லியன் தொகை அறவிட முடியாக் கடன்களை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டும் வகையில் சமீபத்தில் மீண்டும் ஒரு தடவை வதந்தி எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதுடன், இதனை நாம் திட்டவட்டமாக மறுக்கின்றோம். இந்த வதந்தியில் குறிப்பிடும் வகையில் எவ்விதமான கடன்களும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை மக்கள் வங்கியின் முகாமைத்துவம் உறுதிப்படுத்துகின்றது.அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்ற காலகட்டங்களில் இந்த ஆதாரமற்ற செய்திகள் மீண்டும் வெளிக்கிளம்புவது, மறைமுக நிகழ்ச்சிநிரலுடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வதந்திகள் திட்டமிட்ட பிரச்சாரம் என்பதைக் காண்பிக்கின்றது.வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும் செயல்படுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்ற ஒரு நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் இந்த குறுகிய நோக்குடனான முயற்சிகள் குறித்து அது வருந்துகின்றது.நாட்டிலுள்ள, அனுமதி உரிமம் பெற்ற ஏனைய வர்த்தக வங்கிகளைப் போலவே, பலதரப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழ் கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்க தான் செயற்படுவதை மக்கள் வங்கி மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.இந்த ஆதாரமற்ற வதந்திகளைப் புறக்கணித்து, துல்லியமான மற்றும் உண்மையான தகவல் விபரங்களுக்கு மக்கள் வங்கியின் உத்தியோகபூர்வ தகவல் மார்க்கங்களினூடாக வெளியிடப்படுகின்ற விபரங்களை மாத்திரம் நம்புமாறு நாம் பொது மக்களை வலியுறுத்த விரும்புகின்றோம். என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement