• Jul 03 2025

நிந்தவூர் பிரதேச சபையைக் கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்!

shanuja / Jul 2nd 2025, 3:07 pm
image

நிந்தவூர்  பிரதேச சபையின் புதிய தவிசாளராக   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  ஆதம்பாவா அஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர்   தெரிவு , கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி   தலைமையில்  சபை மண்டபத்தில் இன்று(2)   நடைபெற்றது.


 நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 06 உறுப்பினர்களும்   ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  சார்பில் 04 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் என  13 பேர்  அங்கம் வகிக்கின்றனர். 


இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த  இருவர்  புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.


அதனையடுத்து இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சபையின் புதிய தவிசாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  சார்பில்   போட்டியிட்ட ஆதம்பாவா அஸ்பர் தெரிவானார்.


தொடர்ச்சியாக இடம்பெற்ற  உப தவிசாளர் தெரிவில், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான்   தெரிவு செய்யப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச சபையைக் கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் நிந்தவூர்  பிரதேச சபையின் புதிய தவிசாளராக   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த உறுப்பினர்  ஆதம்பாவா அஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர்   தெரிவு , கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி   தலைமையில்  சபை மண்டபத்தில் இன்று(2)   நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 06 உறுப்பினர்களும்   ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி  சார்பில் 04 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரும் என  13 பேர்  அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த  இருவர்  புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.அதனையடுத்து இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சபையின் புதிய தவிசாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  சார்பில்   போட்டியிட்ட ஆதம்பாவா அஸ்பர் தெரிவானார்.தொடர்ச்சியாக இடம்பெற்ற  உப தவிசாளர் தெரிவில், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி முகம்மது இப்ராலெப்பை இர்பான்   தெரிவு செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement