• May 20 2024

தையிட்டியில் மக்களுடைய காணி விரைவில் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை samugammedia

Chithra / Jul 29th 2023, 8:29 am
image

Advertisement

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று(29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், "திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட கட்டளைத் தளபதி பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.


தையிட்டியில் மக்களுடைய காணி விரைவில் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை samugammedia தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று(29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், "திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட கட்டளைத் தளபதி பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement