• Sep 20 2024

டிசம்பருக்குள் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்..! – சபையில் அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Sep 20th 2023, 12:53 pm
image

Advertisement

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஆவணங்கள்  ஒப்படைக்கப்படும்  என வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். 

மக்களினுடைய காணிகளை விடுவிக்கின்ற நோக்கம் அதிகாரிகளிடம் இருக்கின்ற போதிலும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட விவாதத்தின்  போது தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பல மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.

விவசாய நிலங்கள், வீட்டு நிலங்கள், மக்களினுடைய உறுதி காணிகள் மட்டுமல்லாது  அழிக்கப்பட்ட குளங்களை  கூட மீள் செப்பனிடுவதற்கான வசதி வாய்ப்பு கூட தற்போது இல்லாத நிலைமை  தொடர்பில் துறைசார் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார். 

அத்தோடு போருக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த மோசமான நிலை தொடர்ந்து இருப்பதோடு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான மனம் இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்த போதிலும்,  அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதவேளை , இதற்கு பதிலளித்து பேசிய போதே வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி அவர்கள், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இந்த காணிகள் மக்களிடம் வழங்கப்பட்டு ஆவணங்கள்  ஒப்படைக்கப்படும்  என உறுதியளித்துள்ளார்.


டிசம்பருக்குள் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். – சபையில் அமைச்சர் அறிவிப்பு samugammedia எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஆவணங்கள்  ஒப்படைக்கப்படும்  என வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மக்களினுடைய காணிகளை விடுவிக்கின்ற நோக்கம் அதிகாரிகளிடம் இருக்கின்ற போதிலும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட விவாதத்தின்  போது தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பல மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.விவசாய நிலங்கள், வீட்டு நிலங்கள், மக்களினுடைய உறுதி காணிகள் மட்டுமல்லாது  அழிக்கப்பட்ட குளங்களை  கூட மீள் செப்பனிடுவதற்கான வசதி வாய்ப்பு கூட தற்போது இல்லாத நிலைமை  தொடர்பில் துறைசார் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார். அத்தோடு போருக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த மோசமான நிலை தொடர்ந்து இருப்பதோடு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான மனம் இருக்கின்ற போதிலும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்த போதிலும்,  அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதவேளை , இதற்கு பதிலளித்து பேசிய போதே வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி அவர்கள், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இந்த காணிகள் மக்களிடம் வழங்கப்பட்டு ஆவணங்கள்  ஒப்படைக்கப்படும்  என உறுதியளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement