• Sep 21 2024

மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ! samugammedia

Tamil nila / Oct 9th 2023, 8:11 pm
image

Advertisement

மஸ்கெலியா லக்க்ஷபான தோட்டத்தில் இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி கலாநிதி ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத் தொடரில் கட்சி பிரமுகர்களான உதவி தலைவர் ராஜாராம், செயலாளர் விஜயசந்திரன், நிதி காரியதரிசி திரு விஸ்வநாதன் மற்றும் விசேட அதிதிகள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழ்வில் தோட்ட நிர்வாகத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை சுட்டி காட்டப்பட்டதோடு அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.

மேலும் இந்த அரசாங்கத்தித்தின் தன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக விலையேற்றம்,சமூக ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள்,தேர்தல் நடத்த அரசாங்கம் பின் வாங்குவது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு மஸ்கெலியா லக்சபான தோட்டத்திற்கு கூரை தகடுகளும், நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இக் கூட்டத் தொடரில் மலையக மக்கள் முன்னணி கட்சி முக்கியஸ்தர்கள்,  அப்பகுதி தோட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு samugammedia மஸ்கெலியா லக்க்ஷபான தோட்டத்தில் இடம்பெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி கலாநிதி ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.இக்கூட்டத் தொடரில் கட்சி பிரமுகர்களான உதவி தலைவர் ராஜாராம், செயலாளர் விஜயசந்திரன், நிதி காரியதரிசி திரு விஸ்வநாதன் மற்றும் விசேட அதிதிகள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.இந் நிகழ்வில் தோட்ட நிர்வாகத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்ட மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை சுட்டி காட்டப்பட்டதோடு அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தெரிவித்தார்.மேலும் இந்த அரசாங்கத்தித்தின் தன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.குறிப்பாக விலையேற்றம்,சமூக ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள்,தேர்தல் நடத்த அரசாங்கம் பின் வாங்குவது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.அத்தோடு மஸ்கெலியா லக்சபான தோட்டத்திற்கு கூரை தகடுகளும், நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.இக் கூட்டத் தொடரில் மலையக மக்கள் முன்னணி கட்சி முக்கியஸ்தர்கள்,  அப்பகுதி தோட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement