• Jun 12 2025

அமெரிக்காவில் வலுக்கும் மக்கள் போராட்டம்; இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு..!

Sharmi / Jun 11th 2025, 10:24 am
image

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில், பல நாட்களாக நீடித்து வரும் வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். 

அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.

அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில் வலுக்கும் மக்கள் போராட்டம்; இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில், பல நாட்களாக நீடித்து வரும் வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement