• Sep 19 2024

நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாது - பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!

Tamil nila / Feb 12th 2023, 6:10 pm
image

Advertisement

நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாதென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடாத்துவதற்கான பணத்தை இந்த அரசினால் வழங்க முடியாதெனில் 

இந்த அரசு தோல்வியடைந்த அரசாகவே கருதமுடியும்.

 

நிதியமைச்சின் செயலாளர் நிதி வழங்க மறுப்பாராயின் அவரும் அரசியலமைப்பை மீறுபவராகவே இருப்பார்.


இந்த அரசின் செயற்பாடுகளை மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின், உடனடியாக தேர்தலை நடாத்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். 


அத்தோடு தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


நான்கு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடாத்த வேண்டும் என சட்டத்தில் இருந்த போதிலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒரு வருடம் நீடிக்க அதிகாரம் இருக்கின்றது.  


இருந்த போதிலும் தேர்தலை நடாத்த நிதி வளம் இருக்கின்றதா? 

மக்கள் தேர்தலை விரும்புகின்றார்களா என்றெல்லாம் விவாதிக்காமல் தேர்தலை நடாத்த வேண்டும். 

அவ்வாறே மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வந்துள்ளார்கள். 


இன்று பார்ப்போமானால் சில மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல் தனியொரு ஆளுணரின் அதிகாரத்தின் கீழ் 5 வருடங்களாக இருந்து வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாது - பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாதென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தேர்தலை நடாத்துவதற்கான பணத்தை இந்த அரசினால் வழங்க முடியாதெனில் இந்த அரசு தோல்வியடைந்த அரசாகவே கருதமுடியும். நிதியமைச்சின் செயலாளர் நிதி வழங்க மறுப்பாராயின் அவரும் அரசியலமைப்பை மீறுபவராகவே இருப்பார்.இந்த அரசின் செயற்பாடுகளை மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின், உடனடியாக தேர்தலை நடாத்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அத்தோடு தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.நான்கு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடாத்த வேண்டும் என சட்டத்தில் இருந்த போதிலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒரு வருடம் நீடிக்க அதிகாரம் இருக்கின்றது.  இருந்த போதிலும் தேர்தலை நடாத்த நிதி வளம் இருக்கின்றதா மக்கள் தேர்தலை விரும்புகின்றார்களா என்றெல்லாம் விவாதிக்காமல் தேர்தலை நடாத்த வேண்டும். அவ்வாறே மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வந்துள்ளார்கள். இன்று பார்ப்போமானால் சில மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல் தனியொரு ஆளுணரின் அதிகாரத்தின் கீழ் 5 வருடங்களாக இருந்து வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement