• May 19 2024

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! samugammedia

Chithra / Jul 31st 2023, 6:25 am
image

Advertisement

 

பேராதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் வெளியேறியுள்ளமையினால் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் தினசரி கற்கை நெறிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2022 முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தரும், ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்திடம் நடத்திய விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உண்மைதான். இது முக்கியமாக மருத்துவ பீடம், பொறியியல் பீடம், அறிவியல் பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான 16 மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னணி பேராசிரியர்கள் 70 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். ஏராளமானோர் படிப்பு விடுப்பு எடுத்து வெளிநாடு சென்றுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார். 


பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் samugammedia  பேராதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் வெளியேறியுள்ளமையினால் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் தினசரி கற்கை நெறிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனவரி 2022 முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தரும், ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்திடம் நடத்திய விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உண்மைதான். இது முக்கியமாக மருத்துவ பீடம், பொறியியல் பீடம், அறிவியல் பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை பாதித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான 16 மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னணி பேராசிரியர்கள் 70 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். ஏராளமானோர் படிப்பு விடுப்பு எடுத்து வெளிநாடு சென்றுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement