• Apr 30 2024

அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வீசா - இலங்கை மற்றும் ஈரான் பெண்கள் வலியுறுத்து samugammedia

Chithra / Sep 30th 2023, 2:45 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வீசா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மற்றும் ஈரானை சேர்ந்த 22 பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குறித்த விடயத்தை வலியுறுத்தி அவர்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கன்பரா வரையில் 600 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி ஆரம்பித்த இந்த நடைபயணம் கடந்த புதன்கிழமை விக்டோரியாவின் ஷெப்பர்டன் பகுதியை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர விசாக்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக தமது தந்தையையும் சகோதரனையும் இலங்கையில் விட்டுவிட்டு தாய் மற்றும் தமது சகோதரியுடன் தாம் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாக குறித்த நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விக்கான உரிமைகளை அவுஸ்திரேலிய வழங்க வேண்டும் என குறித்த குழு வலியுறுத்தியுள்ளதாக அந்தநாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வீசா - இலங்கை மற்றும் ஈரான் பெண்கள் வலியுறுத்து samugammedia அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வீசா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மற்றும் ஈரானை சேர்ந்த 22 பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர்.குறித்த விடயத்தை வலியுறுத்தி அவர்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கன்பரா வரையில் 600 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்வதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 22ம் திகதி ஆரம்பித்த இந்த நடைபயணம் கடந்த புதன்கிழமை விக்டோரியாவின் ஷெப்பர்டன் பகுதியை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர விசாக்களுக்காகக் காத்திருக்கின்றனர்.பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக தமது தந்தையையும் சகோதரனையும் இலங்கையில் விட்டுவிட்டு தாய் மற்றும் தமது சகோதரியுடன் தாம் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாக குறித்த நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விக்கான உரிமைகளை அவுஸ்திரேலிய வழங்க வேண்டும் என குறித்த குழு வலியுறுத்தியுள்ளதாக அந்தநாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement