• Sep 19 2024

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களை நியமிக்க அனுமதி!

Tamil nila / Feb 8th 2023, 10:42 pm
image

Advertisement

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகாரவை மீண்டும் நியமிப்பதற்கும், ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகரவைப் புதிதாக நியமிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.


அத்துடன், அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்திருப்பதுடன், இவ்வார இறுதி பத்திரிகைகளில் இதற்கான பிரசாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், இதற்கமைய கடந்த முறை பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களை இவ்வார இறுதிப் பத்திரிகைகளில் மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கும் தீர்மானித்தது.



விண்ணப்பம் குறித்த மாதிரிப் படிவம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களை நியமிக்க அனுமதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகாரவை மீண்டும் நியமிப்பதற்கும், ஈ.ஏ.ஜீ.ஆர் அமரசேகரவைப் புதிதாக நியமிப்பதற்கும் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.அத்துடன், அரசியலமைப்பின் 41 ஆ பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கு அரசியலமைப்புப் பேரவை தீர்மானித்திருப்பதுடன், இவ்வார இறுதி பத்திரிகைகளில் இதற்கான பிரசாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், இதற்கமைய கடந்த முறை பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களை இவ்வார இறுதிப் பத்திரிகைகளில் மீண்டும் மீள்பிரசுரம் செய்வதற்கும் தீர்மானித்தது.விண்ணப்பம் குறித்த மாதிரிப் படிவம் பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement