• Nov 23 2024

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி...!வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு...!

Sharmi / Mar 28th 2024, 6:47 pm
image

வலி வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  இன்றையதினம்(27)  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய  வடக்கு மாகாண ஆளுநர்,

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். 

கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். 

இதேவேளை, குறித்த ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி.வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு. வலி வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  இன்றையதினம்(27)  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.இதன்போது உரையாற்றிய  வடக்கு மாகாண ஆளுநர், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement