• Apr 13 2025

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!

Chithra / Apr 8th 2025, 3:58 pm
image

 

18,853 பட்டதாரி இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (08) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, 

கொவிட்-19 தொற்றுநோய், அண்மைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையின்மை விகிதத்தைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதாகத் தெரிவித்தார்

அதன்படி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தரவுகளின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை நடைபெறும்.

பொது நிருவாக, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு “2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம்” கீழ் நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கான ஏற்புடைய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி  18,853 பட்டதாரி இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இன்று (08) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, கொவிட்-19 தொற்றுநோய், அண்மைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையின்மை விகிதத்தைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியதாகத் தெரிவித்தார்அதன்படி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தரவுகளின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை நடைபெறும்.பொது நிருவாக, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு “2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம்” கீழ் நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கான ஏற்புடைய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement