• Sep 21 2024

ஊழலின் பெருச்சாளி கோட்டாபய..! அதன் மிகப் பெரும் தவளை சார்ள்ஸ்..! யாழில் பிரபாகரன் முழக்கம் ..!samugammedia

Sharmi / May 19th 2023, 2:02 pm
image

Advertisement

இலஞ்சம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டால் மட்டுமே நாடு முன்னேற்றமடையும் என்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவளையாகவுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸை வடமாகாண ஆளுநராக நியமித்தால் அது மக்களிற்கான சேவையாக அமையாது என வலி வடக்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்  பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழிலுள்ள ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இலஞ்ச நடவடிக்கைகளில் மிக பெரிய தவளையாகவுள்ள ஆளுநரே இங்கு வருகை தரவுள்ளார். இவர் ஆளுநராக இருந்த காலத்தில் வலி வடக்கில் நடக்கும் லஞ்ச ஊழல்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினோம்.

இருப்பினும், அதனால் எந்த விதமான நன்மையையும் கிட்டவில்லை. இன்று வலிவடக்கு மிகப்பெரிய ஊழல் மிகுந்த இடமாக மாறியுள்ளது.

இலட்ச கணக்கான வேட்பாளர்களை முட்டாளாக்கி, தனது சுயநலத்திற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து  விலகியவர் என்பதுடன் ஜனநாயக தேர்தலில் முழுவதுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒருவராக காணப்படுகின்றார்.

மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டால் அது எவ்வாறு மக்களிற்கான சேவையாக  அமையும்?

ஊழலில் பெருச்சாளியான கோட்டாபய ராஜபக்சவினால் தகுதியற்றவர் என்று வெளியேற்றப்பட்டவரை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஆளுநராக நியமித்திருப்பது அவர் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகியமைக்கு பரிசா இந்த பதவி? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊழலின் பெருச்சாளி கோட்டாபய. அதன் மிகப் பெரும் தவளை சார்ள்ஸ். யாழில் பிரபாகரன் முழக்கம் .samugammedia இலஞ்சம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டால் மட்டுமே நாடு முன்னேற்றமடையும் என்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவளையாகவுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸை வடமாகாண ஆளுநராக நியமித்தால் அது மக்களிற்கான சேவையாக அமையாது என வலி வடக்கு முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்  பிரபாகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழிலுள்ள ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இலஞ்ச நடவடிக்கைகளில் மிக பெரிய தவளையாகவுள்ள ஆளுநரே இங்கு வருகை தரவுள்ளார். இவர் ஆளுநராக இருந்த காலத்தில் வலி வடக்கில் நடக்கும் லஞ்ச ஊழல்கள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடினோம். இருப்பினும், அதனால் எந்த விதமான நன்மையையும் கிட்டவில்லை. இன்று வலிவடக்கு மிகப்பெரிய ஊழல் மிகுந்த இடமாக மாறியுள்ளது. இலட்ச கணக்கான வேட்பாளர்களை முட்டாளாக்கி, தனது சுயநலத்திற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து  விலகியவர் என்பதுடன் ஜனநாயக தேர்தலில் முழுவதுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒருவராக காணப்படுகின்றார். மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டால் அது எவ்வாறு மக்களிற்கான சேவையாக  அமையும்ஊழலில் பெருச்சாளியான கோட்டாபய ராஜபக்சவினால் தகுதியற்றவர் என்று வெளியேற்றப்பட்டவரை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஆளுநராக நியமித்திருப்பது அவர் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகியமைக்கு பரிசா இந்த பதவி எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement