• Apr 27 2024

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்...! மாத்தளன் வீதியை புனரமைத்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி...!

Sharmi / Mar 28th 2024, 5:12 pm
image

Advertisement

இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு   இன்று(28)  வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவநேசதுரை சந்திரகாந்தன்,  இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முல்லைத்தீவுக்கு இன்று(28)  விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது,  முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

குறித்த மக்கள் சந்திப்பில்   கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை,  இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதி புனரமைப்பு தொடர்பில் அம்பலவன் பொக்கணை கிராம பொதுநோக்கு மண்டப  கட்டத்தில் நடைபெற்ற  சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாகவும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.











முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான். மாத்தளன் வீதியை புனரமைத்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி. இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு   இன்று(28)  வாக்குறுதி வழங்கியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிவநேசதுரை சந்திரகாந்தன்,  இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முல்லைத்தீவுக்கு இன்று(28)  விஜயம் மேற்கொண்டார்.இதன்போது,  முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.குறித்த மக்கள் சந்திப்பில்   கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அதேவேளை,  இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதி புனரமைப்பு தொடர்பில் அம்பலவன் பொக்கணை கிராம பொதுநோக்கு மண்டப  கட்டத்தில் நடைபெற்ற  சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ,  இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாகவும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement