• Mar 19 2025

பிள்ளையான் கருணாவால் அதிகளான இளைஞர்கள் படுகொலை: லவகுமார் குற்றச்சாட்டு..!

Sharmi / Mar 19th 2025, 2:29 pm
image

விடுதலைப் புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று முதல் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் பல்வேறு சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தலைமையில் இன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே வி.லவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே ஒட்டுக்குழுக்களாக இருந்து பல கொலைகளை செய்த குழுக்கள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளளார்கள்.

குறிப்பாக கடந்த காலங்களை பார்க்கின்றபோது பிள்ளையான் என்பவரை பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றது. அதேவேளை வியாழேந்திரனை பற்றியும் பல விமர்சனங்கள் இருக்கின்றது.

இவர்கள் மக்களை குழி தோண்டிப் புதைப்பதற்காகவே இந்த முறை போட்டியிடுகின்றனர்.  எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.

இவர்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் அல்ல. இவர்கள் மக்களுடைய வளங்களை சுரண்டி மக்களின் இருப்புக்களை பறிபோகவைத்தவர்கள்.

எனவே மக்கள் விழிப்போடு இந்த பிரதேச சபைத் தேர்தலிலே  சிந்தித்து வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.











பிள்ளையான் கருணாவால் அதிகளான இளைஞர்கள் படுகொலை: லவகுமார் குற்றச்சாட்டு. விடுதலைப் புலிகளில் இருந்து கருணா பிரிந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது அதிகளான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்தார்.எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று முதல் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினம் பல்வேறு சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தலைமையில் இன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே வி.லவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே ஒட்டுக்குழுக்களாக இருந்து பல கொலைகளை செய்த குழுக்கள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளளார்கள்.குறிப்பாக கடந்த காலங்களை பார்க்கின்றபோது பிள்ளையான் என்பவரை பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றது. அதேவேளை வியாழேந்திரனை பற்றியும் பல விமர்சனங்கள் இருக்கின்றது.இவர்கள் மக்களை குழி தோண்டிப் புதைப்பதற்காகவே இந்த முறை போட்டியிடுகின்றனர்.  எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.இவர்கள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் அல்ல. இவர்கள் மக்களுடைய வளங்களை சுரண்டி மக்களின் இருப்புக்களை பறிபோகவைத்தவர்கள்.எனவே மக்கள் விழிப்போடு இந்த பிரதேச சபைத் தேர்தலிலே  சிந்தித்து வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement