• May 19 2024

இலங்கையிலுள்ள தீவுகளை அதிகார சபைக்குள் கொண்டுவரத் திட்டம் - அம்பலப்படுத்திய பேராசிரியர் samugammedia

Chithra / Apr 3rd 2023, 9:43 am
image

Advertisement

இலங்கை தீவைச் சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி திண்ணை விடுதியில் இடம்பெற்ற 13வது திருத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், 


மகாவாலி அதிகார சபை ஒரு அதிகார சபையாக எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தீவுகளை ஒன்றிணைத்து வலுவுள்ள அதிகார சபை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, கச்சதீவு ஆகிய பல தீவுகள் குறித்த அதிகார சபையின் கீழ் நிர்வாகிக்கப்படும்.

18 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த வடக்கு மாகாண சபை செயற்படுத்தப்பட்டதன் பின்னரும் வழங்கப்பட்ட மாகாண சபையை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்தனர்.

மாகாண சபை கட்டமைப்பை இனப் பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பு.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலையாவது நடத்துங்கள் என போராட்டங்கள் எழவும் இல்லை அரசியல்வாதிகள் கேட்கவும் இல்லை.

தற்போது தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டு வரும் திட்டம் மகாவலி அதிகார சபையிலும் பார்க்க வலுவான திட்டமாகவே அமையும்.


தீவுகளுக்கான அதிகார சபை உருவாக்கப்பட்டால் மகாவலியைப் போன்று வலுவுள்ள அதிகார சபையாக உருவாக்கம் பெறுவதோடு மாகாண சபை நடைமுறையில் இருந்தாலும் ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது அதேபோன்று மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் யாவருக்கும் அதிகாரம் கிடையாது.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை முறை நடைமுறையில் இருந்த போது 70 ஆயிரம் குடியேற்றங்கள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கந்தளாயிலும் இடம் பெற்றது.

ஆகவே தமிழ்  மக்கள் இனப்பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தி தம் பக்கம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேவை எழுந்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இலங்கையிலுள்ள தீவுகளை அதிகார சபைக்குள் கொண்டுவரத் திட்டம் - அம்பலப்படுத்திய பேராசிரியர் samugammedia இலங்கை தீவைச் சூழவுள்ள சுமார் 115 தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி திண்ணை விடுதியில் இடம்பெற்ற 13வது திருத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவிக்கையில், மகாவாலி அதிகார சபை ஒரு அதிகார சபையாக எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தீவுகளை ஒன்றிணைத்து வலுவுள்ள அதிகார சபை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவு, கச்சதீவு ஆகிய பல தீவுகள் குறித்த அதிகார சபையின் கீழ் நிர்வாகிக்கப்படும்.18 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த வடக்கு மாகாண சபை செயற்படுத்தப்பட்டதன் பின்னரும் வழங்கப்பட்ட மாகாண சபையை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்தனர்.மாகாண சபை கட்டமைப்பை இனப் பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பு.உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்த வேண்டும் என போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலையாவது நடத்துங்கள் என போராட்டங்கள் எழவும் இல்லை அரசியல்வாதிகள் கேட்கவும் இல்லை.தற்போது தீவுகளை அதிகார சபையின் கீழ் கொண்டு வரும் திட்டம் மகாவலி அதிகார சபையிலும் பார்க்க வலுவான திட்டமாகவே அமையும்.தீவுகளுக்கான அதிகார சபை உருவாக்கப்பட்டால் மகாவலியைப் போன்று வலுவுள்ள அதிகார சபையாக உருவாக்கம் பெறுவதோடு மாகாண சபை நடைமுறையில் இருந்தாலும் ஆளுநருக்கும் அதிகாரம் கிடையாது அதேபோன்று மாவட்ட செயலகம் பிரதேச செயலகம் யாவருக்கும் அதிகாரம் கிடையாது.ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை முறை நடைமுறையில் இருந்த போது 70 ஆயிரம் குடியேற்றங்கள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து கந்தளாயிலும் இடம் பெற்றது.ஆகவே தமிழ்  மக்கள் இனப்பிரச்சனைக்கு அப்பால் பிராந்திய அபிவிருத்தி தம் பக்கம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தேவை எழுந்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த கலந்துரையாடலில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement