• May 19 2024

வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம்!

Chithra / Dec 31st 2022, 10:10 am
image

Advertisement

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஜனவரி 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கலந்துரையாடப்படவுள்ளது.


இதற்காக தாய்லாந்திற்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த அரசாங்கத்தின் போது பங்களாதேஷுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த திட்டம் இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஜனவரி 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கலந்துரையாடப்படவுள்ளது.இதற்காக தாய்லாந்திற்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் கடந்த அரசாங்கத்தின் போது பங்களாதேஷுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement