• May 19 2024

ஓடுபாதையில் சறுக்கி விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைந்த விமானம்! samugammedia

Tamil nila / Jul 13th 2023, 5:58 pm
image

Advertisement

விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

இணையத்தில் வேகமாக பரவிவரும் வீடியோ ஒன்றில், அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைவதையும், விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று ஓடிவருவதையும் காணமுடிகிறது.

சோமாலியா நாட்டில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த விமானத்தில் 30 பயணிகளும், நான்கு பணிப்பெண்களும் இருந்துள்ளார்கள். ஆனால், சிறு காயங்கள் தவிர்த்து யாரும் அந்த விபத்தில் உயிரிழக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் விமானம் தரையிறங்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை என அந்த விமானத்தின் விமானி கூறியுள்ளார். ஆனால், விமானியின் தவறுதான் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் எப்படியும், விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்குட்படுத்தியபிறகே விமான விபத்துக்கான சரியான காரணம் தெரியும் என மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்

ஓடுபாதையில் சறுக்கி விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைந்த விமானம் samugammedia விமானம் ஒன்று தரையிறங்கும்போது, ஓடுபாதையில் சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.இணையத்தில் வேகமாக பரவிவரும் வீடியோ ஒன்றில், அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி, விமான நிலைய சுவரில் மோதி இரண்டாக உடைவதையும், விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று ஓடிவருவதையும் காணமுடிகிறது.சோமாலியா நாட்டில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த விமானத்தில் 30 பயணிகளும், நான்கு பணிப்பெண்களும் இருந்துள்ளார்கள். ஆனால், சிறு காயங்கள் தவிர்த்து யாரும் அந்த விபத்தில் உயிரிழக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.மேலும் விமானம் தரையிறங்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை என அந்த விமானத்தின் விமானி கூறியுள்ளார். ஆனால், விமானியின் தவறுதான் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.மேலும் எப்படியும், விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்குட்படுத்தியபிறகே விமான விபத்துக்கான சரியான காரணம் தெரியும் என மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement