• Apr 27 2024

வடமாகாணத்தில் நாளை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டம்..! samugammedia

Chithra / Nov 2nd 2023, 12:09 pm
image

Advertisement

 

வடமாகாணத்தில் நாளை(03)  காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாங்கள் பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

நாளை முன்னெடுக்கப்பட உள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின்போது வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது.

மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும். 

அரசாங்கமானது எமது முன்மொழிவுகளினூடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன் வர வேண்டும். 

அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்து இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் நமது போராட்டத்தை தீவிர படுத்த வேண்டி ஏற்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் நாளை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டம். samugammedia  வடமாகாணத்தில் நாளை(03)  காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நாளை முன்னெடுக்கப்பட உள்ள இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின்போது வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது.மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும். அரசாங்கமானது எமது முன்மொழிவுகளினூடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன் வர வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்து இலவச சுகாதார சேவையை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆகிய நாங்கள் நமது போராட்டத்தை தீவிர படுத்த வேண்டி ஏற்படும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement