நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தி கொட்டும் மழைக்கு மத்தியில் சாமிமலை பகுதியில் உள்ள ஹோரன தோட்ட கம்பெனிகளுக்கு உரித்தான பெயலோன் தோட்ட ஐந்து பிரிவுகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.
ஹோரன தோட்ட கம்பெனிகளுக்கு பொறுப்பான அதிகாரியை இவ்வாறான மழை காலத்தில் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் தேயிலை செடிக்குள் இறங்கி கொழுந்து பறித்து காட்டுமாறும் தேயிலை செடிகள் பக்கம் செல்லும் போது நூற்றுக்கணக்கான அட்டைகள் உடம்பு முழுவதும் ஒட்டிக் கொள்வதாகவும் தேயிலை கொழுந்து பறிப்பதா? அட்டைகளை அகற்றுவதா என்று தெரியவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு நாளாந்தம் இரத்தம் சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல், உடன் அதிகரித்த வேதனம் 1700/= ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி கொட்டும் மழைக்கு மத்தியில் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம். நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தி கொட்டும் மழைக்கு மத்தியில் சாமிமலை பகுதியில் உள்ள ஹோரன தோட்ட கம்பெனிகளுக்கு உரித்தான பெயலோன் தோட்ட ஐந்து பிரிவுகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.ஹோரன தோட்ட கம்பெனிகளுக்கு பொறுப்பான அதிகாரியை இவ்வாறான மழை காலத்தில் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் தேயிலை செடிக்குள் இறங்கி கொழுந்து பறித்து காட்டுமாறும் தேயிலை செடிகள் பக்கம் செல்லும் போது நூற்றுக்கணக்கான அட்டைகள் உடம்பு முழுவதும் ஒட்டிக் கொள்வதாகவும் தேயிலை கொழுந்து பறிப்பதா அட்டைகளை அகற்றுவதா என்று தெரியவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.இவ்வாறு நாளாந்தம் இரத்தம் சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல், உடன் அதிகரித்த வேதனம் 1700/= ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.