• Oct 09 2026

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது.! சஜித் எச்சரிக்கை

Aathira / Oct 8th 2026, 6:47 am
image

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

புத்தசாசனத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு உரிய இடமும் பலமும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு.

சிறைச்சாலைத் திணைக்களத்தின் 550 ஆவது ஒழுங்குவிதி மற்றும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 216 ஆவது பிரிவின்படி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் கைதிகளின் துறவற ஆடையை அகற்ற முடியாது. இது நாட்டுக்குத் தவறான முன்மாதிரியை வழங்கும். துறவற ஆடையை அகற்றுவதா, இல்லையா என்பதை மதத் தலைவர்களே தீர்மானிப்பார்கள்.

ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்களித்த அரசு, தற்போது குரங்குகளைக் கணக்கெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

உற்பத்திச் செலவை முறையற்ற விதமாகக் கணக்கிட்டு, விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 120 ரூபா மட்டுமே வழங்கி, அவர்களை அரசு  நட்டத்துக்குள்ளாக்கியுள்ளது.

நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பு உள்ளபோதிலும், அரசு தொடர்ச்சியாக அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதனால் நோயாளர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். - என்றார்.

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. சஜித் எச்சரிக்கை மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,புத்தசாசனத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு உரிய இடமும் பலமும் வழங்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு.சிறைச்சாலைத் திணைக்களத்தின் 550 ஆவது ஒழுங்குவிதி மற்றும் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 216 ஆவது பிரிவின்படி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் கைதிகளின் துறவற ஆடையை அகற்ற முடியாது. இது நாட்டுக்குத் தவறான முன்மாதிரியை வழங்கும். துறவற ஆடையை அகற்றுவதா, இல்லையா என்பதை மதத் தலைவர்களே தீர்மானிப்பார்கள்.ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்களித்த அரசு, தற்போது குரங்குகளைக் கணக்கெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.உற்பத்திச் செலவை முறையற்ற விதமாகக் கணக்கிட்டு, விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 120 ரூபா மட்டுமே வழங்கி, அவர்களை அரசு  நட்டத்துக்குள்ளாக்கியுள்ளது.நாட்டில் மேலதிக அரிசி கையிருப்பு உள்ளபோதிலும், அரசு தொடர்ச்சியாக அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.நாட்டில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.அரச வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதனால் நோயாளர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement