• May 21 2024

இலங்கையில் பெற்றோர் போதைப்பொருளுக்கு அடிமையானதால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

Chithra / Dec 7th 2022, 9:04 am
image

Advertisement


இலங்கையில் தமது பெற்றோர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சுமார் 12,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் என சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் வைத்தியசாலைக்கு வருவதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாதத்தை விட பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான அனைத்து பழக்கங்களும் மிகவும் ஆபத்தானது என்றும், இந்த சூழ்நிலைக்கு எதிராக மக்கள் அனைத்து போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பாடசாலை மாணவர், மாணவிகளிடையே வேகமாக பரவி வருகிறது.

இதனால் மாணவர் சமுதாயத்தினரிடையே போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இன்றைய நாட்களில் பாடசாலை மாணவிகளை பிக் மெட்ச் (பாடசாலை கிரிக்கெட்) போட்டிகளின் போது பீர் குடிக்க வைப்பது அதிகரித்துள்ளது.

இறுதியில் அவர்கள் ஏதோ ஒரு வகையில் போதைக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களில் சிலர் ஐஸ் பாவனையை நோக்கி இழுக்கப்படுகின்றனர் என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் பரவினால், நாட்டின் பொறுப்புகளை ஏற்க அடுத்த தலைமுறையே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் பெற்றோர் போதைப்பொருளுக்கு அடிமையானதால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை இலங்கையில் தமது பெற்றோர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சுமார் 12,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலோர் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் என சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.பெற்றோர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் வைத்தியசாலைக்கு வருவதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை விட பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான அனைத்து பழக்கங்களும் மிகவும் ஆபத்தானது என்றும், இந்த சூழ்நிலைக்கு எதிராக மக்கள் அனைத்து போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பாடசாலை மாணவர், மாணவிகளிடையே வேகமாக பரவி வருகிறது.இதனால் மாணவர் சமுதாயத்தினரிடையே போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இன்றைய நாட்களில் பாடசாலை மாணவிகளை பிக் மெட்ச் (பாடசாலை கிரிக்கெட்) போட்டிகளின் போது பீர் குடிக்க வைப்பது அதிகரித்துள்ளது.இறுதியில் அவர்கள் ஏதோ ஒரு வகையில் போதைக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களில் சிலர் ஐஸ் பாவனையை நோக்கி இழுக்கப்படுகின்றனர் என்றும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.இந்த அச்சுறுத்தல் பரவினால், நாட்டின் பொறுப்புகளை ஏற்க அடுத்த தலைமுறையே இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement