• Apr 28 2024

மன்னார் போக்குவரத்து சேவையின் அவல நிலை...! கண்டு கொள்ளாத நிர்வாகம்...! மக்கள் குற்றச்சாட்டு..!samugammedia

Sharmi / Nov 17th 2023, 3:48 pm
image

Advertisement

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான மன்னார் போக்குவரத்து சாலையினுடைய சேவை மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாகாவும் திருப்தியற்ற சேவையை மன்னார் போக்குவரத்து சாலை வழங்குவதாகவும் மன்னார் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு 40 பேரூந்துகள் சேவையில் ஈடுபடவேண்டிய நிலையில் வெறுமனே 25 பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் மன்னார் மாவட்டத்தில் இருந்து தூர பிரதேசங்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் அரச பேரூந்துகளின் சீரற்ற சேவையின் காரணமாக பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும் கல்வி செயற்பாடுகளை உரிய நேரத்திற்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் காலை 6.15 மணியளவில் முசலி முள்ளிக்குளம் ஊடாக சேவையை வழங்கும் அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒழுங்கான அட்டவனையின் பிரகாரம் செயற்படுவது இல்லை எனவும் பல நாட்கள் சேவைக்கு வருவது இல்லை எனவும் மன்னாரில் இருந்து முள்ளிக்குளம் பாடசாலை உட்பட முசலி பகுதிகளில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

40 பேரூந்துகள் சேவை வழங்க வேண்டிய மன்னார் மாவட்டத்தில் 25 பேரூந்துகளே சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் சேவை வழங்க முடியாவிடத்து குறித்த சேவையை தனியார் போக்குவரத்து சேவைக்கு தற்காலிகமாவது ஒப்படைக்குமாறு பாதிக்கப்படும் ஆசிரியர்கள் உட்பட பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சேவையை வழங்குவது தொடர்பில் பல முறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டும் இதுவரை குறித்த சேவையை அரச பேரூந்துகள் வழங்குவது தொடர்பிலோ அல்லது தற்காலிகமாக தனியாருக்கு வழங்குவதிலோ மன்னார் போக்குவரத்து சாலை எந்த வித அக்கறையும் இன்றி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் போக்குவரத்து சேவையின் அவல நிலை. கண்டு கொள்ளாத நிர்வாகம். மக்கள் குற்றச்சாட்டு.samugammedia இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான மன்னார் போக்குவரத்து சாலையினுடைய சேவை மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாகாவும் திருப்தியற்ற சேவையை மன்னார் போக்குவரத்து சாலை வழங்குவதாகவும் மன்னார் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு 40 பேரூந்துகள் சேவையில் ஈடுபடவேண்டிய நிலையில் வெறுமனே 25 பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் மன்னார் மாவட்டத்தில் இருந்து தூர பிரதேசங்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் அரச பேரூந்துகளின் சீரற்ற சேவையின் காரணமாக பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும் கல்வி செயற்பாடுகளை உரிய நேரத்திற்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் காலை 6.15 மணியளவில் முசலி முள்ளிக்குளம் ஊடாக சேவையை வழங்கும் அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒழுங்கான அட்டவனையின் பிரகாரம் செயற்படுவது இல்லை எனவும் பல நாட்கள் சேவைக்கு வருவது இல்லை எனவும் மன்னாரில் இருந்து முள்ளிக்குளம் பாடசாலை உட்பட முசலி பகுதிகளில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.40 பேரூந்துகள் சேவை வழங்க வேண்டிய மன்னார் மாவட்டத்தில் 25 பேரூந்துகளே சேவையில் ஈடுபடுகின்ற நிலையில் சேவை வழங்க முடியாவிடத்து குறித்த சேவையை தனியார் போக்குவரத்து சேவைக்கு தற்காலிகமாவது ஒப்படைக்குமாறு பாதிக்கப்படும் ஆசிரியர்கள் உட்பட பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இவ்வாறான நிலையில் குறித்த சேவையை வழங்குவது தொடர்பில் பல முறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டும் இதுவரை குறித்த சேவையை அரச பேரூந்துகள் வழங்குவது தொடர்பிலோ அல்லது தற்காலிகமாக தனியாருக்கு வழங்குவதிலோ மன்னார் போக்குவரத்து சாலை எந்த வித அக்கறையும் இன்றி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement