• May 19 2024

மே தினத்தில் எழுச்சி பெறத் தயாராகும் பொதுஜன பெரமுன!SamugamMedia

Sharmi / Mar 13th 2023, 10:37 am
image

Advertisement

இம்முறை மே தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்திருந்தார்.

அண்மையில் இது குறித்த ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், மே தினத்தை கையாள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

காலி முகத்திடல்,கெம்பல் மைதானம் மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்கள் மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த மூன்று இடங்களிலிருந்தும் ஒரு இடத்தை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரமுடியும் என்றாலும், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவையால் நிலை குலைந்த நிலையில் உழைக்கும் மக்கள் இருக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. உழைக்காத மக்களை உழைக்கும் மக்களுடன் இணைந்து செயற்பட தூண்டுவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும் என சாகல காரியவசம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கட்சியின் தலைமை குறித்து வினவிய போது,

கட்சியின் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

மே தினத்தில் எழுச்சி பெறத் தயாராகும் பொதுஜன பெரமுனSamugamMedia இம்முறை மே தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்திருந்தார்.அண்மையில் இது குறித்த ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், மே தினத்தை கையாள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறதுகாலி முகத்திடல்,கெம்பல் மைதானம் மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்கள் மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த மூன்று இடங்களிலிருந்தும் ஒரு இடத்தை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரமுடியும் என்றாலும், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவையால் நிலை குலைந்த நிலையில் உழைக்கும் மக்கள் இருக்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. உழைக்காத மக்களை உழைக்கும் மக்களுடன் இணைந்து செயற்பட தூண்டுவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும் என சாகல காரியவசம் தெரிவித்திருந்தார்.தொடர்ந்தும் அவர் கட்சியின் தலைமை குறித்து வினவிய போது, கட்சியின் தலைவர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் தலைவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement