• Aug 10 2025

கல்முனை மாநகரில் குவிந்த பொலிஸார்- இராணுவம் பாதுகாப்பு!

Thansita / Aug 9th 2025, 11:45 am
image

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்றையதினம்  கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பங்குபற்றலுடன்   அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி ஆரம்பமானது 


மேலும் காலை முதல் மாலை வரை  பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

 இந்நிகழ்வில் சவளக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கல்முனை மாநகரில் குவிந்த பொலிஸார்- இராணுவம் பாதுகாப்பு கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்றையதினம்  கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பங்குபற்றலுடன்   அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து பொலிஸ் பிரிவு வாகனங்களின் பேரணி ஆரம்பமானது மேலும் காலை முதல் மாலை வரை  பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள், சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் என்பவற்றைப் பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் சவளக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement