• Oct 15 2026

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள பொலிஸார் தயார்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 14th 2026, 4:03 pm
image


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.


பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


குறிப்பாக, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணச் சேவைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் விசேட நிவாரணக் குழுக்கள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்கான விசேட பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், பொதுமக்கள் தமது பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அல்லது ஏனைய அனர்த்தங்களால் ஆபத்து ஏற்படக்கூடிய வீதிகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்திருந்தால், அவற்றை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது தலைமையகப் பொலிஸ் பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.


அத்துடன், அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பொலிஸார் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


குறிப்பாக, பொதுமக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சமூகப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணச் சேவைகள் மற்றும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அவசர நிலைமைகளின்போது பொதுமக்கள் 118 என்ற பொலிஸ் துரித தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள பொலிஸார் தயார் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணச் சேவைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் விசேட நிவாரணக் குழுக்கள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்கான விசேட பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், பொதுமக்கள் தமது பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அல்லது ஏனைய அனர்த்தங்களால் ஆபத்து ஏற்படக்கூடிய வீதிகள் மற்றும் இடங்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்திருந்தால், அவற்றை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது தலைமையகப் பொலிஸ் பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.அத்துடன், அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பொலிஸார் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.குறிப்பாக, பொதுமக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சமூகப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணச் சேவைகள் மற்றும் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அவசர நிலைமைகளின்போது பொதுமக்கள் 118 என்ற பொலிஸ் துரித தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement